இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற நிலைப்பாட்டை சவால் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான தீர்மானம் இன்று (06) அறிவிக்கப்படவுள்ளது.
குறித்த உறுப்பினர் பிரித்தானியாவின் பிரஜை என மனுவில் உண்மைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இந்த நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற பதவியை வகிக்க தகுதியற்றவர் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியாகாத வகையில் ஆணை பிறப்பிக்குமாறு சமூக ஆர்வலர் அவுஷல ஹேரத் மனு தாக்கல் செய்திருந்தார்.
குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த மனு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.