தற்போதைய அரசாங்கம் கொண்டு வரவுள்ள ஒலிபரப்பு அதிகார சபை சட்டத்தை எதிர்ப்பதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் நிறைவேற்று சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அதனைத் தோற்கடிப்பதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நீதிமன்றங்களிலும் சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்தச் சட்டமூலத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தின் எஞ்சிய பகுதியும் அழிக்கப்படும் எனவும், முட்டாள்தனமான ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டத்தை தோற்கடிக்க முயற்சிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.