பேராயர் ஜெரோம் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (05) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
எல்லே குணவம்ச தேரர் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, இடைக்கால மனுவொன்றை சமர்ப்பித்த போது, அதற்கான காரணங்களை தெரிவிக்க அவகாசம் கோரினார்.
மனுதாரர் பேராயர் ஜெரோம் பெர்னாண்டோ சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன அந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தது.