ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சி கூட்டணியின் விசேட உபகுழு இன்று (05) கூடவுள்ளது.
இதன்படி, பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் இந்தக் குழு ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உத்தேச சட்டமூலத்தில் ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பதற்கும், ஊடகவியலாளர்களுக்கு அபராதம் விதிப்பதற்கும், இலத்திரனியல் ஊடகங்களை ஒழிப்பதற்கும் அதிகாரம் வழங்கப்படும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.