நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகளவு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலி மாத்தறை, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.