அமைச்சரவை அமைச்சர்கள் தமது கீழ் உள்ள இராஜாங்க அமைச்சர்களை பணியாற்ற அனுமதிப்பதில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் விசேட கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதுடன், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனைக் குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர்கள் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் அந்த அமைச்சுக்களின் பாடங்களை பகிர்ந்தளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு மட்டுமல்ல, அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்களுக்கும் இந்த விதியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனைத் தெரிவிக்கையில், சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.