இலகுரக ஆயுதங்களுக்கானதுப்பாக்கி தோட்டாக்களை தயாரிக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வேயங்கொடையில் உள்ள இராணுவத்தினரின் உற்பத்தி ஆலையில் படையினருக்கான சீருடைகள், போர் ஹெல்மெட்கள், உடல் கவசம் போன்றவற்றை உற்பத்தி செய்து வருவதுடன், இரண்டாம் கட்டமாக இந்த வெடிமருந்துகளை தயாரிக்க இராணுவம் தயாராகி வருகிறது.
இது தொடர்பில் இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் வினவியபோது, இலங்கை இராணுவத்தில் திறமையான அதிகாரிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
இலகுரக ஆயுதங்களுக்கான வெடிமருந்து உற்பத்தியை இரண்டாம் கட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டால் பெருமளவிலான அந்நியச் செலாவணி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலகுரக ஆயுதங்களில் 9MM அடங்கும். பிஸ்டோலா, டி. 56 வகை துப்பாக்கிகள் மற்றும் எல்.எம்.ஜி. துப்பாக்கிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இலகுரக ஆயுதங்களுக்குத் தேவையான வெடிமருந்துகள் இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.