ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவை நிறுவுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு தரநிலையுடன் உரிமம் வழங்குவதை ஒழுங்குபடுத்தும் முறைமையை தயாரிப்பதற்கான முன்மொழிவுகளை மாத்திரமே அமைச்சரவை உபகுழு தயாரித்துள்ளதாக அமைச்சர் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் வெகுஜன ஊடக அமைச்சினால் விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.