உலக ரக்பி சம்மேளனமும் ஆசிய ரக்பி சம்மேளனமும் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை ரக்பி விளையாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் உலக ரக்பி சம்மேளனத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் ரக்பி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும், விளையாட்டைப் பாதுகாப்பதற்கான தீர்மானத்தின் அவசியம் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ரக்பி விளையாட்டுக்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு உண்டு என்பதும் சிறப்பு.