follow the truth

follow the truth

November, 16, 2024
HomeTOP1பிளாஸ்டிக் தடைக்காலம் மீண்டும் ஒத்திவைப்பு

பிளாஸ்டிக் தடைக்காலம் மீண்டும் ஒத்திவைப்பு

Published on

இன்று (01) முதல் பிளாஸ்டிக் கூடைகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பல பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்திருந்தாலும், அது மேலும் தாமதமாகும் என தெரிய வந்துள்ளது.

பிளாஸ்டிக் வைக்கோல், பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் குடிநீர் கோப்பைகள், பானம் கிளறி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கோப்பைகள் (தயிர் கப் தவிர), பிளாஸ்டிக் ஸ்பூன்கள் மற்றும் ஃபோர்க்ஸ் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்வது தொடர்பாக கடந்த பெப்ரவரி மாதம் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

அதன்படி இன்று (01) முதல் இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும், இந்தத் தடை தொடர்பான வர்த்தமானியின் பல தொழில்நுட்ப விடயங்கள் திருத்தப்பட்டு சட்ட வரைவு திணைக்களத்திடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைகள் அநேகமாக அடுத்த வாரத்திற்குள் நிறைவடையும் என்றும் அதிகாரசபை குறிப்பிடுகிறது.

இது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே இந்த தடை தொடர்பான வர்த்தமானியை ஜூன் மாத முற்பகுதியில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடனுதவி பெற இலங்கைக்கு அனுமதி

இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும்...

முர்து பெர்னாண்டோவை பிரதம நீதியரசராக நியமிக்க அரசியலமைப்பு சபை அங்கீகாரம்

நாட்டின் பிரதம நீதியரசராக திருமதி முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது. நாட்டின் பதில் பிரதம நீதியரசராக...

தேர்தலின் பின்னரான காலத்திலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

தேர்தலின் பின்னரான காலத்திலும் மக்கள் அமைதியாக செயற்படுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பொலிஸ் அதிகார வரம்புகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்...