follow the truth

follow the truth

October, 27, 2024
HomeTOP1QR எரிபொருள் ஒதுக்கீடு - இன்று நள்ளிரவு முதல் விலை திருத்தம்

QR எரிபொருள் ஒதுக்கீடு – இன்று நள்ளிரவு முதல் விலை திருத்தம்

Published on

தற்போது QR அமைப்பின் மூலம் வெளியிடப்படும் எரிபொருள் ஒதுக்கீடு நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு வாரத்திற்கு மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு 07 லீட்டர் எரிபொருள் கோட்டா 14 லீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு வழங்கப்படும் 8 லீட்டர் எரிபொருள் 14 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான 15 லீட்டர் எரிபொருள் கோட்டா 22 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கார் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு 30 லீட்டரில் இருந்து 40 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பஸ்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை 60 லீட்டரிலிருந்தும், லொறிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை 75 லீட்டரில் இருந்து 125 லீட்டராகவும் அதிகரிக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, விலை திருத்தத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இம்முறையும் எரிபொருளின் விலை குறைக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை”

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என...

மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி - கஹவத்த...

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...