16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு குஜராத் மற்றும் சென்னை அணிகள் தெரிவாகி இன்று (28) இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.