ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) ஜப்பானின் சவாராவில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவரான ஜப்பான் பிரதம சங்கநாயகத்தை சந்தித்து கலந்துரையாடினார்.
1984 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன, ஜப்பானில் உள்ள ஒரே தேரவாத பௌத்த விகாரையான சவாராவில் உள்ள லங்காஜி கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், ஜப்பானில் தேரவாடா பகோடா கொண்ட ஒரே கோயில் லங்காஜி கோயில் ஆகும்.
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக இருந்தபோது ஒருமுறை இந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க, கலாநிதி துன்ஹிட்டியவ தம்மாலோக தேரர் மற்றும் ஜப்பானில் உள்ள விகாரையில் பணிபுரியும் கொஸ்வத்தே பாலித தேரர் ஆகியோர் கலந்துகொண்டனர்.