follow the truth

follow the truth

January, 16, 2025
Homeஉலகம்இம்ரான் கானுக்கு வெளிநாடு செல்ல தடை

இம்ரான் கானுக்கு வெளிநாடு செல்ல தடை

Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சித்தலைவருமான இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளின் விசாரணை தீவிரமடைந்து உள்ளது. இந்த நிலையில் இம்ரான்கான், அவரது மனைவி பஸ்ரா பீபி மற்றும் பி.டி.ஐ. கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட 80 பேர் வெளிநாடு செல்ல தடை விதித்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசை இம்ரான்கான் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,
“வெளியேறுதல் தடை பட்டியலில் எனது பெயரை இணைத்ததற்காக பாகிஸ்தான் அரசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில் வெளிநாடு செல்வதற்கான திட்டம் எதுவும் என்னிடம் இல்லை.
ஏனெனில் வெளிநாடுகளில் எனக்கு சொத்துகளோ, வர்த்தகமோ இல்லை. ஒரு வங்கி கணக்கு கூட இல்லை’ என தெரிவித்தார். மேலும் அவர், ‘எனக்கு ஒரு விடுமுறை கிடைத்தால் நமது வடக்கு பிராந்திய மலைகளுக்குத்தான் செல்வேன்.

இந்த பூமியில் அதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான இடம்” என்றும் கூறினார்.

நவாஸ் ஷெரீப் உள்பட பாகிஸ்தானை ஆளும் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதையே அவர் மறைமுகமாக சாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தான்சானியாவில் பரவும் புதிய வைரஸ் – இதுவரை 08 பேர் பலி

தான்சானியாவில் மார்பர்க் வைரஸ் (Marburg virus) என சந்தேகிக்கப்படும் ஒரு தொற்றுநோயால் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக உலக...

யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டும் 80 பேரை கொன்று குவித்த இஸ்ரேல் – 25 குழந்தைகளும் உயிரிழப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டார் பிரதமர் தலைமையிலான குழு நேற்று அறிவித்தது. எதிர்வரும்...

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து – மருத்துவமனையில் அனுமதி

பாலிவுடின் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் இன்று(16) காலை அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட...