ஜனாதிபதி தனக்கு நெருக்கமான பத்து பணக்கார வர்த்தகர்களின் கடனை வராக் கடன்களாக தள்ளுபடி செய்துள்ளதாகவும், அதற்கு தாம் உடன்படவில்லை எனவும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (24) தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க தாம் வாக்களித்ததாகவும் ஆனால் அவர் செய்த தவறுகளுக்கு உடன்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றத்தில் மேலும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம,
“.. ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வாக்களித்த 134 பேரில் நானும் ஒருவன்.
அவரது நல்ல வேலையைப் பாராட்டுகிறேன், அவ்வாறே அவரது தவறை விமர்சிக்கிறேன்.
ஜனாதிபதி என்பதால், தனக்கு நெருங்கிய 10 நட்பு வணிகர்கள் வாங்கிய கடனை வராக் கடன் என்று தள்ளுபடி செய்தார். எங்களுக்கு அவை பிடிக்காது.
அதற்காக நாம் வாக்களிக்கவில்லை. நாங்கள் அவரை நியமித்தோம், அவருடைய கட்சியின் முதலாளித்துவ தொழிலதிபர்களின் கடனை வெட்டுவதற்காக அல்லவே..” எனத் தெரிவித்திருந்தார்.
வராக் கடன் : கடன் பெற்றவர்களிடமிருந்து நீண்டகாலமாக அறவிடமுடியாமல் போன கடன்களின் ஒரு பகுதியைக் குறிக்கும். அவ்வாறு வசூலிக்க இயலாத வராக் கடன் தொகைகளை கணக்கீட்டுப் பதிவின்போது தொடர்புடைய கடனாளியின் பேரேட்டுக்கணக்கு பதிவு அழிக்கப்படுவதுடன் அந்நிதி நிறுவனம் அக்கடனைத் தள்ளுபடி செய்து அவ்வாண்டின் வணிகத்தில் ஏற்பட்ட நட்டமாக நட்டக் கணக்கில் தாக்கல் செய்வதை குறிக்கும்.