பாரிய ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்காததால், அவை மூடப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல பெரிய அளவிலான ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வியொன்றை எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியதாவது;
“.. இந்நாட்டில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை ஹோட்டல்கள் மற்றும் உள்ளூர் ஆடை நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய அனுமதித்ததால் உள்நாட்டு ஆடைத் தொழிலுக்கு அடி விழுந்துள்ளது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் அதிபர்களின் கடன் வட்டி விகிதம் குறைக்கப்படுமா? அந்த தொழிலதிபர்கள் வாங்கிய கடன்களில் சிலவற்றை தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளதா? முதலாளிகள் வாராக் கடன்களை தள்ளுபடி செய்யும் போது அவர்களுக்கு ஏன் சலுகைகள் வழங்க முடியாது? கடனை 30 சதவீதம் குறைக்க வேண்டும்.
அவர்களுக்கான கடன் நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். இக்குழுவினர் மீது அரசு செலுத்தும் கவனம் போதுமானதாக இல்லை.
இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை. இந்தக் கேள்விக்கான பதில்களை அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
இந்த நாட்டிற்கு அன்னியச் செலாவணியைக் கொண்டு வரும் நிறுவனங்கள் ஆடைத் தொழிற்சாலைகள். எனவே, ஒரு அரசாங்கம் அந்த நிறுவனங்களை மறக்க முடியாது. தொழிலதிபர்களுக்கு திட்டங்களை மேற்கொள்ள ஊக்கம் கொடுங்கள்..”