சமீபத்தில் கயானா வே பள்ளியின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தங்கி இருந்த 19 மாணவர்கள் உயிரிழந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
மாணவி ஒருவர் வேண்டுமென்றே தீ வைத்ததாக பாடசாலை நிர்வாகம் கூறுகிறது.
காரணம் அவரது கைத்தொலைபேசியை ஆசிரியை ஒருவரும், விடுதி காப்பாளரும் எடுத்துச் சென்றமையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பழிவாங்கும் வகையில், குறித்த மாணவி விடுதிக்கு தீ வைத்தது தெரிய வந்துள்ளது.
திங்கட்கிழமை (22) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மாணவிகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர், அவர்களில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.