பாதை இலக்கம் 190 மீகொடை – புறக்கோட்டை மற்றும் பாதை இலக்கம் 170 அதுருகிரிய – புறக்கோட்டை ஆகிய மார்க்கங்களுக்கான பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.
தனியார் பேரூந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் போட்டிபோட்டு இயங்கி வந்துள்ளதுடன் இது தொடர்பில் தனியார் பேரூந்து சாரதிக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் சாரதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் பேரூந்து சாரதிகள் தெரிவிக்கின்றனர்.