இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்து வரும் வரை பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரேமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்று காலை நாட்டில் இருந்து சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு புறப்பட்டார்.
ஜனாதிபதி எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ள நிலையில், அரச தலைவர் வரும் வரை பதில் அமைச்சராக பிரேமித பண்டார தென்னகோன் செயற்படுவார்.