இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில், பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்கட்சித்தலைவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், முப்படையினர் மற்றும் யுத்தத்தின் போது, உயிரிந்த இராணுவ வீரர்களின் உறவினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில், இவ்வருடம் குறித்த நினைவு தினத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கலந்து கொள்ளவுள்ளார் எனத் தெரிவித்திருந்தார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவிய சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில்; தான் இம்முறை இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அரச தலைவன் என்ற ரீதியில் தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு செலியூட் அடிப்பேன் எனவும், அது ஒரு ஒழுக்க முறை என்றும் இதில் அரசியல் பக்கச்சார்பு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.