அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (19) இரவு 10:00 மணி முதல் சனிக்கிழமை (20) காலை 8:00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கோட்டே மற்றும் கடுவெல நகர சபைகள், மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைகள் மற்றும் கொழும்பு 4,5,7,8 ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இன்று இரவு முதல் 10 மணித்தியாலங்களுக்கு இந்த நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு நுகர்வோருக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், தேவையான நீரை சேமித்து வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறது.