மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழில் உள்ள தகவல்கள் தொடர்பாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழில் வாகனம் ஒன்றின் தற்போதைய உரிமையாளர் மற்றும் முந்தைய உரிமையாளரின் பெயர்களை மட்டும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் உரிமையாளர்களின் எண்ணிக்கை இனி சான்றிதழில் பட்டியலிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நேற்று (17) முதல் அமுலுக்கு வரும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.