follow the truth

follow the truth

November, 26, 2024
HomeTOP1சஜித் என் மனைவியிடம் பேசினார்.. குரல்பதிவுகளை வெளியிடவும் தயார்...

சஜித் என் மனைவியிடம் பேசினார்.. குரல்பதிவுகளை வெளியிடவும் தயார்…

Published on

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறாமல் தம்மை தக்க வைத்துக் கொள்ளுமாறு தனது மனைவி மற்றும் சகோதரரிடம் கூறிய குரல்பதிவுகள் தன்னிடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவருடன் தான் ஒரு நாளோ இரண்டு நாளோ வேலை செய்ததால் அவரது அனுமதியின்றி குரல்பதிவுகளை வெளியிடத் தயாரில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர் அனுமதி அளித்தால் குரல்பதிவுகளை வெளியிடத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹரிசன் ஐக்கிய மக்கள் சக்தியில் ஈக்கில் என அக்கட்சி சார்பில் விடுத்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சஜித் பிரேமதாச தனது மனைவி மற்றும் சகோதரனுடன் பேசிய குரல்பதிவுகளை பகிரங்கப்படுத்தப்பட்டால் நாம் ஈக்கிலா தென்னை மரமா என்பதை புரிந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சைக்கிள் சவாரியின் தொடக்க விழாவில் தயாசிறி ஜயசேகர

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் சைக்கிள் ஓட்டல் நிகழ்வொன்றில் இணைந்து கொண்டார். ஆரோக்கியமான வாழ்வுக்கு...

ஆசன சம்பவம், பல்வேறு அச்சுறுத்தல்களால் வீதியில் இறங்க முடியாது – பாதுகாப்பு கோரும் எம்பி அர்ச்சுனா

தனக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு தேவை என யாழ்.மாவட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். இலங்கையின் 10வது...

மழையால் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மழையால் லெப்டோஸ்பைரோசிஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலும், ஒக்டோபர் மாதம் முதல்...