பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் உட்பட தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 4 குற்றச்சாட்டுக்களில் 3 குற்றச்சாட்டுகள் நீக்கப்படுவதாக அரசாங்க சட்டத்தரணி டவுனிங் சென்டர் நீதிமன்றில் இன்று (18) அறிவித்தார்.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுகளில் ஒன்றை முன்வைத்து எஞ்சிய மூன்று குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்படும் என இன்று (18) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரசாங்க சட்டத்தரணி ஹ்யூ படின் டவுனிங் சென்டர் நீதவானிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அதை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் கிளாரி ஃபர்னான், மூன்று குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதன்படி, தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக அரசாங்க சட்டத்தரணி சுமத்த தீர்மானித்த குற்றச்சாட்டானது பெண்ணின் அனுமதியின்றி உடலுறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கு ஜூலை 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.