follow the truth

follow the truth

January, 30, 2025
HomeTOP1இலங்கையில் பாதிப்பேருக்கு உயர் இரத்த அழுத்தம்

இலங்கையில் பாதிப்பேருக்கு உயர் இரத்த அழுத்தம்

Published on

இலங்கையில் 62% ஆண்களுக்கும் 48.1% பெண்களுக்கும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு நேற்று (17ஆம் திகதி) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

STEPS கணக்கெடுப்பின்படி இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடுமையான தலைவலி, நெஞ்சு வலி, சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், வாந்தி, மங்கலான பார்வை ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.

35 வயதுக்கு மேற்பட்ட எவரும் நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசாங்க வைத்தியசாலைகளில் நிறுவப்பட்டுள்ள சுகாதார நிலையங்களில் இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ள முடியும்.

உலகளவில் பதிவாகியுள்ள இருதய நோய் மற்றும் அகால மரணத்திற்கு உயர் இரத்த அழுத்தம் ஒரு முக்கிய காரணமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெண்களுக்குப் பாதுகாப்பான பணியிடத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும்...

யோஷிதவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் எஞ்சிய 2 துப்பாக்கிகளையும் மீள ஒப்படைக்குமாறு...

சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தை ஸ்தாபிக்க தீர்மானம்

அரச நிறுவனங்களின் வலைத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை கணினி...