அமெரிக்காவின் கடன் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்திக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொதுச் செலவினங்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் பல இணக்கப்பாடுகளுக்கு அவர்கள் வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஒப்பந்தங்களில், அமெரிக்க ஜனாதிபதியின் ஆசியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
எவ்வாறாயினும், தற்போதைய கடன் வரம்பை உயர்த்துவது குறித்து குறிப்பிட்ட உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்று சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தெரிவித்தார்.
இந்த வார இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை திவாலாக்கும் முயற்சியில் ஈடுபடமாட்டேன் என ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.
கடன் பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.