ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை (15) மற்றுமொரு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் நாளை (15) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்..
அதிகாரப்பகிர்வு, வடக்கு காணிப்பிரச்சினை, தமிழ் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் எண்ணிக்கை 05 ஆகும்.
இதேவேளை, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.