சீமெந்து விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக சீமெந்து மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,600 ரூபாவாகும்.
இந்த விலை குறைப்பு இன்று (13) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.