follow the truth

follow the truth

September, 14, 2024
Homeஉள்நாடுபயறு விலை குறையுமா?  பயறு கொள்வனவிற்கு நிதி ஒதுக்கியதாக கூறும் அரசாங்கம்!

பயறு விலை குறையுமா?  பயறு கொள்வனவிற்கு நிதி ஒதுக்கியதாக கூறும் அரசாங்கம்!

Published on

உள்நாட்டு பயறு உற்பத்தியை கொள்வனவு செய்ய திறைசேரி நிதி ஒதுக்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஊடு பயிராக வளர்க்கப்படும் பயறு அறுவடையை விற்பனை செய்ய முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் செய்த முறைப்பாட்டை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சந்தையில் தற்போது பயறு ஒரு கிலோ 890 ரூபா வரை விற்கப்படுகிறது. மொணராகலை, ஹம்பாந்தோட்ட, ரஜரட்ட பிரதேசங்களில் பயறு அறுவடை தற்போது நடந்து வருகிறது.

எனினும், தமது உற்பத்திப் பொருட்களை விற்க முடியாதிருப்பதாக விவசாயிகள் முறையிட்டுள்ளதாக மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். சந்தையில் தற்போது நிலவும் விலைக்கேற்ப விவசாயிகளிடம் பயறு கொள்வனவுசெய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஒருபுறம் சந்தையில் ஒரு கிலோ பயறு 890 ரூபாவிற்கு விற்கப்படுகிறது. சந்தையில் பொருட்களுக்கு கேள்வி அதிகரிக்கும் நிலையில் அதன் விலையும் அதிகரிக்கிறது.

இலங்கையில் பயறு விலை கடந்த ஒரு வருடத்தில் 100 வீதம் அதிகரித்திருப்பதாக சந்தை நிலவரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்க முடியாதிருப்பதாக முறையிட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.

அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு தமது உற்பத்திக்கேற்ற விலை கிடைக்க வேண்டும் என்பது இன்றியமையாததாகும்.

உற்பத்தி அதிகரித்திருப்பதால் 890 ரூபாவிற்கு விற்கப்படும் பயறு விலை குறையுமா என்பது மட்டுமே தற்போது பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 18 முதல் கண்காணிப்புப் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின்...

1,350 ரூபாவை அறிவித்து வர்த்தமானி வெளியீடு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1350 ரூபாவையும் மேலதிக ஒரு கிலோ கொழுந்துக்கான கொடுப்பனவாக 50 ரூபாவையும் நிர்ணயித்து...

தனிநபர் வருமான வரி வீதத்தை குறைக்க திட்டம்

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது அறவிடப்படும் தனிநபர் வருமான வரி வீதத்தை குறைப்பதற்கு அமைச்சரவை திட்டமிட்டுள்ளது. இதுவரை...