கம்பஹா மாவட்டம் கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இளைஞன் ஒருவன் கொட்டதெனியாவ பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டதெனியாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொட்டதெனியாவ பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 33 லீற்றர் 750 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 1,890 லீற்றர் கோடா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
