follow the truth

follow the truth

January, 15, 2025
HomeTOP1X-Press Pearl பேரழிவு உலக வரலாற்றில் மிகப்பெரிய கடல் பேரழிவாகும்

X-Press Pearl பேரழிவு உலக வரலாற்றில் மிகப்பெரிய கடல் பேரழிவாகும்

Published on

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் விபத்து உலக வரலாற்றில் மிகப்பெரிய கடல் சேதம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.

கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதத்தை ரூபாயிலும் டொலரிலும் அளவிட முடியாது எனவும் இதனால் இந்நாட்டில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற கப்பல் சேதம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“.. உலக வரலாற்றில் இது மிகப்பெரிய கடல் இரசாயன பேரழிவாகும். இதற்கு முன் இந்த அளவுக்கு அழிவு ஏற்பட்டதில்லை. நமது கடற்பாசிகளின் அழிவு, கடல்வாழ் உயிரினங்களின் அழிவு, நமது கடற்கரையோரங்களின் அழிவு, நமது வளிமண்டலத்தின் அழிவு போன்றவை உலக வரலாற்றில் மிகப்பெரிய கடல் இரசாயன அழிவு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைமைகளை மீட்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போதைய அனைத்து அறிவியல் அறிக்கைகளின்படி, அழிவு மோசமாகி வருகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அழிவு குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆனால் இந்த விவாதத்தின் அடிப்படை நமக்குக் கிடைக்கும் இழப்பீடு பற்றியது…” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயார் – சீன ஜனாதிபதி

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும்...

பாடசாலை மாணவியை கடத்திய சந்தேக நபர்கள் ஜனவரி 27 வரை விளக்கமறியலில்

கடந்த 11 ஆம் திகதி கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற சம்பவத்தின் சந்தேக நபர்கள்...

14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...