உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் வங்கி முறைமை மற்றும் பொது வைப்புகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பேணுவதே மத்திய வங்கியின் பிரதான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த நிதியுதவி வரம்புகளை பூர்த்தி செய்வதற்கு, இலங்கை குறைந்தபட்சம் உள்நாட்டுக் கடனின் முதிர்வு காலத்தை நீட்டித்து தற்போதைய 30 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.