இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீடுகள் குறித்து விசாரணை நடத்த ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா நேற்று இரவு இலங்கை வந்தடைந்தார்.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.
இதன்படி இன்று காலை ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்கவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.சி.சி உப தலைவருக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (10) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.