தனது சேவைக் காலத்தை நிறைவுசெய்து கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான எகிப்து நாட்டின் தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி (Hussein El Saharty) அவர்கள்
இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
எகிப்து நாட்டுச் சிவில் அமைப்பொன்றின் ஒருங்கிணைப்பாளராகப் புதிதாக நியமனம் பெற்றுள்ள அவர், இலங்கையுடனான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளாா்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தொடர்புகள் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்திக்கொள்வதன் அவசியம் தொடர்பிலும், ஹுஸைன் அவர்கள் தொடர்ந்து எடுத்துரைத்துள்ளாா்.