பேலியகொட மெனிங் வணிக வளாகத்தில் கடை அறைகளை வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பல்வேறு நபர்களிடம் இருந்து 650 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
10 கடை அறைகள் தருவதாக கூறி தொழிலதிபர் ஒருவரிடம் மட்டும் குறித்த இராஜாங்க அமைச்சர் பெருமளவு பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், உரிய பணம் வழங்கப்பட்ட பலருக்கு அந்த வணிக வளாகத்தில் கடைகள் வழங்கப்படவில்லை. பேலியகொட மெனிங் வணிக வளாகம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது.
இதன்படி, பலர் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தெனுக விதானகமகேவை சந்தித்து இது தொடர்பான தமது முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இராஜாங்க அமைச்சர் தெனுக விதானகமகே முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.