ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று(09) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.