தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த சில தினங்களில் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை காத்திருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (9) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
ஆணைக்குழுக்கள் நியமனம் தொடர்பில் எமது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் வினவியபோது, தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய ஆணைக்குழுக்களின் நியமனங்களை தாமதப்படுத்துவது வீண் செயலாகும்.
அந்த ஆணைக்குழுக்களை விரைவில் நியமித்து முடிப்பேன் என நம்புகின்றேன் என்றார்.
ஏற்கனவே அரசியலமைப்பு சபையினால் ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது பொருத்தமானதல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசியலமைப்பு சபைக் கூட்டங்களில் தொடர்ச்சியாக உண்மைகளை சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் எவ்வித தடையும் இல்லை எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.