follow the truth

follow the truth

October, 24, 2024
Homeவணிகம்கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பானிய உதவி

கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பானிய உதவி

Published on

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இருதரப்பு கடனாளர்களை ஒருங்கிணைத்து கடன் மறுசீரமைப்பு செயல்முறை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பான் நிதி அமைச்சர் சுசுகி சுஞ்சி குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் 56 ஆவது வருடாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்கால கடன் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு கடன் தரவுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவது அவசியம் என்று ஜப்பானிய நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் ஊடாக வங்கி முறைமைக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதிக்குள் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் விரிவான பகுப்பாய்வை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிடுகின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் மற்றும் இளநீர் விலை

தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதன்படி, சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபா...

Hot ‘N’ Spicy ஆக மாறும் சனா

இலங்கை , கொழும்பு 2024 ஒக்டோபர் 05 : வளர்ந்து வரும் பதின்ம வயது கலைஞரான சனாவை தனது...

இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஜப்பான் தயார்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியான ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான்...