மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோர் தேர்தலில் வாக்களிப்பதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட பல முன்னோடித் திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக விசேட மருத்துவ சான்றிதழ் பெறும் முறையை தேர்தலுக்கு தேர்தல் மாற்றுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பார்வையற்றோர் வாக்குச் சீட்டில் வாக்களிக்கும் வகையில் சோதனை செய்யப்பட்ட புதிய முறை இதுவரை வெற்றியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் எதிர்நோக்கும் தொடர்பாடல் குறைபாடுகள் காரணமாக, அவ்வாறானவர்கள் பல சந்தர்ப்பங்களில் வாக்களிப்பதைத் தவிர்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
எனவே செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் தேர்தல் மற்றும் வாக்களிக்கும் முறை குறித்து தெரிவிக்கும் வகையில் தகவல் தொடர்பு சேனல் அமைக்கும் வகையில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் இம்மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.