follow the truth

follow the truth

October, 24, 2024
HomeTOP1எட்டு பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பமாகவுள்ளது

எட்டு பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பமாகவுள்ளது

Published on

உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கத்திய இசை மற்றும் இந்தி பாடங்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் 08 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு இன்று(08) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட விடைத்தாள்கள் வெளி மாகாணங்களில் உள்ள 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள்களின் மதிப்பீடு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் கண்காணிப்புப் பணியில் கடந்த வியாழக்கிழமை முதல் பங்கேற்கத் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் திட்டம் – இருவர் கைது

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்...

கடையொன்றில் தீப்பரவல் – மஹவெவ வீதிக்கு பூட்டு

மஹவெவ பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சிலாபம் - கொழும்பு பிரதான மார்க்கம் மஹவெவ பகுதியில் மூடப்பட்டுள்ளதாக...

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த மாலைதீவு உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் இன்று (23) கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில்...