நாட்டில் டெங்கு பரவுவதற்கு முக்கிய காரணம் டெங்கு வைரஸின் மூன்றாவது திரிபு என பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயாளர்களின் இரத்தப் பரிசோதனையின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர், கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா பிரதேசங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியதாகவும், மார்ச் மாதமளவில், முன்னர் பதிவாகியிருந்த இரண்டாம் வகை டெங்குக்குப் பதிலாக மூன்றாம் வகை டெங்கு நோய் பதிவாகியுள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.