மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா இன்று (06) நடைபெறவுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பின்னர், பிரித்தானியாவின் அரியணைக்கு இளவரசர் சார்ல்ஸ் பெயரிடப்பட்டு, முடிசூட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் இந்த நிகழ்வில் 2,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களில் நூற்றுக்கணக்கான அரச தலைவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆங்கிலேயர்களின் முடிசூட்டு விழா நடந்து 70 ஆண்டுகள் ஆகிறது.
1953 ஆம் ஆண்டு, மன்னன் சார்லஸின் தாயார் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழா நடைபெற்றது.
இதில் 8,000 பேர் கொண்ட விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர்.
மன்னன் சார்ல்ஸ் மற்றும் ராணி பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து சிறப்பு தங்க முலாம் பூசப்பட்ட வண்டியில் வெஸ்மிண்டர் அபேக்கு வரும்போது முடிசூட்டு விழாக்கள் தொடங்கும்.