அமெரிக்க சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று இன்று (05) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
570 பயணிகள் மற்றும் 369 பணியாளர்களுடன் Insignia என்ற கப்பல் இந்தியா – கொச்சியில் இருந்து வந்தது.
இந்த கப்பல் நாளை (06) இரவு மியன்மர் நோக்கி புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Insignia கப்பலில் இருந்து வந்த சுற்றுலா குழுவினர் கொழும்பு நகருக்கு விஜயம் செய்ய உள்ளனர்.