இலங்கையில் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் வர்த்தகத்தில் இணையும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்காக 350 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், தலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து பணியாற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (5) கொழும்பு பவுண்டேஷன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் எரிபொருள் கூடம் உரிமையாளர்கள் மற்றும் எரிபொருள் நுகர்வோருக்கு நன்மை பயக்கும் முடிவுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்களான இந்திக அனுருத்த, டி.வி.சானக்க உட்பட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.