பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இரண்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை கல்வி வலயத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவிகளை இந்த அதிபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் புபுரஸ்ஸ பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
51 வயதுடைய இந்த அதிபர் பஸ்ஸில் வீட்டுக்குச் செல்லும் போது வேலைப் பையை மறைத்து வைத்து மாணவிகளின் மார்பகங்களையும் தொடைகளையும் தொட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் அதனை பார்த்த மாணவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முறைப்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.