வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் விசேட பெக்கேஜ் ஒன்றை அறிமுகப்படுத்த ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வரும் காலங்களில் அரசாங்க நிதி மற்றும் வெளிநாட்டு முதலீட்டுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட சலுகைகளின் தொகுப்பு ஒன்று முன்வைக்கப்பட உள்ளது.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு போதிய ஊக்குவிப்புக்கள் இல்லாதது பாரிய பிரச்சினை எனவும், இவ்வளவு இயற்கை வளங்கள் இருந்தும் அது முறையாக மேற்கொள்ளப்படாமை தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.