follow the truth

follow the truth

January, 20, 2025
HomeTOP1இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

Published on

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு தொடர்பான அறிக்கையை வெளியிடும் ஆணைக்குழு, அந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு மேலதிகமாக ஆப்கானிஸ்தான், சீனா, நைஜீரியா மற்றும் நிகரகுஆவா ஆகிய நாடுகளில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சில மதத் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தங்கள் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னார் இரட்டைக் கொலை – நால்வர் கைது

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான துப்பாக்கிச்...

சுஜீவ சேனசிங்கவுக்கு நீதிமன்ற உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம்...

ரயில்வே இ-டிக்கெட் மாஃபியா குறித்து CID விசாரணை

ரயில்வே திணைக்களத்தினால் இணையத்தளத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப்...