மித்தெனிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னதாக ஆறு பேர் சந்தேகத்தின் அடிப்படையில், கைதான நிலையில், இன்று பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 36 வயதுடைய இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஜூலம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
கைதான பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களுக்கு ரி- 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய 12 தோட்டாக்களை வழங்கியதாக முதற்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மித்தெனிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
