follow the truth

follow the truth

January, 20, 2025
HomeTOP213ஆவது திருத்தம் - தேர்தல் குறித்து இந்தியாவிடமிருந்து அறிவிப்பு

13ஆவது திருத்தம் – தேர்தல் குறித்து இந்தியாவிடமிருந்து அறிவிப்பு

Published on

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் , மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியா தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்குமிடையில் நேற்று(28) இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இதன் போது புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதோடு , இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் அது தொடர்பான விடயங்களில் முன்னேற்றம் குறித்து உயர்ஸ்தானிகரிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமளித்தனர்.

மேலும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்குறுதியளித்தபடி ஊழல் அரசியல் ஒழிக்கப்படும் – ஜனாதிபதி

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி ஊழல் அரசியலை இல்லாதொழிக்க பாடுபடுவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை கட்டுகுருந்த...

இலங்கையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு

இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அவர்களுக்கான ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு...

இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து ஸ்மித் விலகல்

இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீபன் ஸ்மித் விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த...