உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் தொகுதிகளுக்கு அண்மித்த பிரதேசங்களிலுள்ள அரச நிறுவனங்களில் பணிபுரிய அனுமதி வழங்கும் சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என பிரதமரும் பொது நிர்வாக அமைச்சருமான தினேஷ் குணவர்தன இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொலைதூர பிரதேசங்களில் இருந்து அரச நிறுவனங்களுக்கு வருபவர்களுக்கு மீண்டும் அந்த இடங்களிலேயே கடமைகளை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பான விவாதத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
தேர்தல் பிற்போடப்பட்டாலும் இரத்துச் செய்யப்படவில்லை என்ற நிபந்தனையின் கீழ் தேர்தல் சட்டத்தை மீறாத வகையில் செயற்படுவது முக்கியம் எனத் தெரிவித்த தினேஷ் குணவர்தன, அந்த உண்மையை தேர்தல்கள் ஆணைக்குழுவும் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்திருந்தார்.